கர்நாடக மாநிலத்தில் உள்ள முலபாகிலு பகுதியில் அஞ்சனாத்திரி மலை அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்த ஜோதி என்ற பெண்மணி குடும்பத்தகறாரின் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி அஞ்சனாத்திரி மலையின் உச்சிக்கு தன்னுடைய மகள்களை அழைத்துக் கொண்டு வந்துள்ளார். அதன்பிறகு தன்னுடைய இரு மகள்களின் மீதும் மண்ணெனையை ஊற்றி தீ வைத்து எரித்துவிட்டு தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஊர் மக்கள் ஜோதியை தடுத்து நிறுத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஒரு சிறுமியை மருத்துவமனைக்கு மீட்டு அனுப்பி வைத்தனர். ஆனால் அதிக அளவு தீக்காயங்களின் காரணமாக 6 வயது சிறுமி உயிர் இழந்துவிட்டார். இந்த சிறுமியின் உடல் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட நிலையில், காவல்துறையினர் ஜோதியை கைது செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜோதியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இது சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.