மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து தென்மேற்கே 566 கி.மீ. தொலைவில் இன்று காலை 8.59 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6.1 ஆக பதிவாகியுள்ளது என்று தேசிய நிலநடுக்கம் அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இருப்பினும் இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை.
அதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை சுமத்ரா தீவின் தென்மேற்கு கடலோர பகுதியில் நீர்நிலைகளை இரவு 9:30 மணிக்கு நடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் பெங்குலு, தெற்கு சுமத்ரா மற்றும் லாம்பங்க் மாகாணங்களுக்கு அருகில் உணரப்பட்டது. மேலும் கடற்கரையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் கடலுக்குள் இந்த நிலநடுக்கத்தின் மையம் ஏற்பட்டு இருந்தது. இதனால் பாதிப்புகள் எதுவும் உடனடியாக தெரியவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.