Categories
உலக செய்திகள்

பகீர்!…. பயணிகள் விமானத்தில் தீ விபத்து…. நொடியில் உயிர் தப்பிய பயணிகள்…. பெரும் பரபரப்பு….!!!

டொமினிக்கன் குடியரசில் இருந்து வந்த ரெட் ஏர் பயணிகள் விமானம் ஒன்று நேற்று புளோரிடா மகாணத்தில் உள்ள மியாமி சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்கியது. அப்போது எம்டி 82 ஜெல் லைனர் வகை விமானத்தின் முன்பக்க கியரில் பழுது ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் ஓடுதளத்தில் லேசாக மோதி தீப்பிடித்து. இதனையடுத்து விரைந்து வந்த விமான நிலைய தீயணைப்பு படையினர். இரசாயன நுரையே பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

சரியான நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் விமானத்தில் இருந்த 126 பயணிகளும் உயிர் தப்பினர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த 3 பயணிகள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். மற்ற பயணிகள் அனைவரும் பேருந்து மூலம் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் இந்த தீ விபத்து குறித்து மியாமி விமான நிலைய அதிகாரி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |