உத்திரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் கங்கை நதி நீர்மட்டம் நேற்று அபாய அளவு 70.262 மீட்டரை தாண்டியது. அதனைபோல வாரண ஆற்றிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் வாரணாசியின் சில பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி விட்டது. அதுமட்டுமில்லாமல் புகழ்பெற்ற படித்துறைகளும் நீரில் மூழ்கியது. அதன்படி அஸ்சி படித்துறையில் இருந்து நமோ படித்துறை வரை உள்ள பகுதிகள் நீரில் மூழ்கிவிட்டது. இதனையடுத்து உடல் தகுனத்துக்காக கொண்டுவரப்பட்ட உடல்களை எரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. ஹரிஷ்சந்திர மணிகர்ணிகா ஆகிய படித்துறைகளுக்கு கொண்டுவரப்பட்ட உடல்கள் அருகில் உள்ள தெருக்களிலும், வீட்டு மொட்டை மாடிகளிலும் தகனம் செய்யப்பட்டஅவலம் நடைபெற்றது. இடப்பற்றா குறை காரணமாக உடல் தகனத்திற்கு உடல்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றது.
அதனைத் தொடர்ந்து தாழ்வான பகுதியில் வீடுகளுக்குள் வெள்ளப் புகுந்தது. அதனைப் போல ஹகுல்கஞ்ச், நைபஸ்டி ஆகிய பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. அங்கு வசிக்கும் மக்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர். அவர்களுக்காக 40 நிவாரண முகங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 250 குடும்பங்களை சேர்ந்த 1300 பேர் முகாம்களில் தங்கி உள்ளனர். அவர்களுக்கு உணவு தண்ணீர் வழங்கப்படுகிறது. முன்னெச்சரிக்கையாக மருத்துவ குழுக்களும் தங்க வைக்கப்பட்டுள்ளது. மேலும் அடிப்படை வசதிகள், கால்நடைகளுக்கு தீவனம் அளிக்கப்பட்டு வருகிறது.