Categories
தேசிய செய்திகள்

பகீர்!….இமாச்சலத்தில் நிலச்சரிவு…. 8 பேர் காயம்….. பயங்கர சம்பவம்…..!!!

இமாச்சல பிரதேசம் கங்க்ரா மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கிய 8 பேர் படுகாயம் அடைந்ததாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து காங்ரா மாவட்ட அவசரக்கால செயல்பாட்டு மையம் வெளியிட்ட தகவலில், இந்த நிலச்சரிவு காலை 9 மணிக்கு மாவு ஆலைக்கு கட்டுமான தளத்தில் ஏற்பட்டது.

இதில் 8 பேர் காயமடைந்துள்ளனர். அதில் சஹதேவ்(21) மற்றும் அவரது சகோதரர் வாசுதேவ்(30), ராஜூகுமார்(19), கௌரவ்(20), தேவ் நாராயணன்(40) மற்றும் ஜகத்(42) ஆகியோர் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர்கள். மேலும் நீது(24) உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர் மற்றும் வினய்குமார்(44) கங்க்ரா மாவட்டத்தை சேர்ந்தவர் என்று கண்டறியப்பட்டுள்ளது என்று பேரிடர் மேலாண்மை இயக்குனர் சுதேஷ் மோக்தா கூறினார்

Categories

Tech |