Categories
சினிமா தமிழ் சினிமா

பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட இயக்குனர் பாக்யராஜ்…. எதற்கு தெரியுமா?….!!!!

சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் நடந்த நூல்வெளியீட்டு விழாவில் பங்கேற்ற இயக்குநர் பாக்கியராஜ் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. அந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், பிரதமர் மோடியை விமர்சிப்பவர்கள் மூன்று மாதத்தில் குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள். ஏன் நான் இதைச் சொல்கிறேன் என்றால் மூன்று மாத குழந்தைக்கு தான் வாய், காது இருக்காது என்று கூறினார். குறைப்பிரசவம் என பாக்கியராஜ் கூறிய கருத்து மாற்றுத்திறனாளிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து குறைப்பிரசவத்தில் பிறந்தவர்கள் என்ற தனது கருத்துக்கு இயக்குநர் பாக்கியராஜ் மன்னிப்பு கோரி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், தனது கருத்து புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்பதாக கூறிய அவர்,குறைப் பிரசவம் குறித்த தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்றும் குறை பிரசவத்திற்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் சம்பந்தமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |