Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

நோயாளி பற்றி கவலை என்ன….? மருத்துவ அதிகாரியின் சர்ச்சை பேச்சு…. வெளியான ஆடியோவால் பரபரப்பு…!!

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த துரைராஜ் என்பவரது மகன் கார்த்திக் என்பவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் சிவகங்கை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட  கார்த்திக்கிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் காட்டும்படி செவிலியர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து மருத்துவமனை மருத்துவ அதிகாரியிடம் கார்த்திக்கின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து செவிலியரை தொடர்பு கொண்ட அவர் நோயாளியை மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்காமல் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி பரிந்துரைத்தது ஏன் என கேள்வி எழுப்பினார்.

அப்போது அவர் நோயாளி இருந்தால் என்ன? செத்தால் என்ன? நோயாளியை அரசு மருத்துவமனைக்கு தான் பரிந்துரைக்க வேண்டும் என்ற விதிமுறையை பின்பற்றும் படி செவிலியருக்கு அறிவுறுத்திய மருத்துவ அதிகாரி நோயாளிகளின் நலன் பற்றி கவலைப்பட வேண்டாம் எனக் கூறியது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

 

Categories

Tech |