Categories
உலக செய்திகள்

நோயாளி இறந்து பல மணி நேரம் கடந்தும்… நடவடிக்கை எடுக்கப்படாத அவல நிலை… பிரிட்டனில் பரபரப்பு…!!

பிரிட்டனில் மருத்துவமனையில் இறந்த நோயாளி ஒருவர் 5 மணி நேரம் வைக்கப்பட்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிரிட்டனில் கொரோனா எண்ணிக்கை அதிகமாக பரவி வருவதால் மருத்துவமனைகளில் பணியாளர்கள் பற்றாக்குறையாக உள்ளது. எனவே பல மருத்துவமனைகளில் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது நோயாளி ஒருவர் கீழே விழுந்ததால் உயிரிழந்த சம்பவம் பர்மிங்காம் NHS அறக்கட்டளை தொடர்புடைய பல்கலைக்கழக மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் மருத்துவமனைகள் சிலவற்றில் செவிலியர்கள் ஒரே சமயத்தில் சுமார் 17 நோயாளிகளை கவனித்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும் ஒரு சில மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்பில்லாத நோயாளிகளும் இட  பற்றாக்குறையினால் கொரோனா வார்டுகளில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் சுட்டன் கோல்ட் பீல்டில் இருக்கும் குட் ஹோப் என்ற மருத்துவமனையில் சரியான நேரத்திற்குள் நோயாளிகள் உரிய வார்டுகளுக்கு மாற்றப்படுவது இல்லை என்று நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும் எட்டாம் நம்பர் வார்டில் 6:45 மணி அளவில் நோயாளி ஒருவர் இறந்துள்ளார். இவர் பகல் 11 :35 மணி வரை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாமல் வைக்கப்பட்டுள்ளார் என்ற குற்ற சாட்டு எழுந்துள்ளது.

மேலும் பல மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சையை செவிலியர்களால் வழங்க முடியவில்லை என்று கூறப்பட்டுள்ளது. மேலும் சில மருத்துவமனைகளில் நோயாளிகள் அனுமதிக்கப்படும் போது இருந்த உடல் நிலையை விட திருப்பி அனுப்பப்படும் போது மோசமான நிலையில் இருந்ததாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |