சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துமனையில் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 76 பிரத்யேக படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதை பார்வையிடுவதற்காக மக்கள் நலத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் சென்றார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், காய்ச்சல், தொண்டை கரகரப்பு போன்ற அறிகுறிகள் ஏதாவது இருந்தால் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படவில்லை.
பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் மார்க்கெட் பகுதியில் பரிசோதனை செய்யப்படுகிறது. அனைவரும் கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்று கூறினா. இதையடுத்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேசுகையில், சென்னையில் கொரோனா அதிகரித்து வருகிறது. அறிகுறி உள்ளவர்கள் அனைவரும் கட்டாயம் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். நோய் தோற்று பாதித்தவரின் உறவினர்களுக்கும் கட்டாயம் பரிசோதனை செய்ய வேண்டும். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளி மட்டுமல்லாமல் அவருடன் இருப்பவர்களுக்கும் கட்டாயம் பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.