தென்னாப்பிரிக்காவில் 40 வயதுடைய நபரொருவர் மருத்துவமனை வளாகத்தில் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 நோயாளிகள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனிலிருக்கும் மருத்துவமனைக்கு காவல்துறை அதிகாரிகள் தங்களது விசாரணையிலுள்ள நபரை சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளார்கள். அப்போது அந்த நபர் தன்னை அழைத்து வந்த காவல்துறை அதிகாரி ஒருவரிடமிருந்து துப்பாக்கியைப் பிடுங்கி மருத்துவமனை வளாகத்தில் பலமுறை சுட்டுள்ளார்.
இந்த துப்பாக்கி சூட்டில் மருத்துவமனையிலிருந்த 2 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். இதனையடுத்து அருகிலிருந்த மற்ற காவல்துறை அதிகாரிகள் அந்த 40 வயது நபரிடமிருந்து துப்பாக்கியை பிடுங்கி விட்டு அங்கிருந்து அவரை அழைத்து சென்றுள்ளார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு நிலவியுள்ளது.