Categories
உலக செய்திகள்

நொடிக்கு 2 பேருக்கு கொரோனா…. அபாய கட்டத்தில் சிக்கிய பிரபல நாடு…. அதிர்ச்சி தகவல்….!!!!

உலக நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரான்சில் நேற்று முன்தினம் 2,08,000 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதுகுறித்து அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஆலிவர் வெரன் கூறியது, ஒவ்வொரு நொடிக்கும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. இதனால் மருத்துவமனைகளின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

பிரான்ஸ் மட்டுமில்லாமல் பிரிட்டன்,இத்தாலி, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கிரீஸ், சைப்ரஸ் மற்றும் மால்டா ஆகிய நாடுகளிலும் கொரோனா பரவல் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை இனிவரும் நாட்களில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட நினைத்த அமெரிக்கர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விமான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |