Categories
உலக செய்திகள்

நைஜீரிய நாட்டில் எண்ணெய் ஆலையில் குண்டுவெடிப்பு… 2 பேர் பலி…பெரும் சோகம்…!!!!

நைஜீரியாவில் உள்ள எண்ணெய் ஆலையில் நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் உள்ள தென் மாகாணமான இமோவில் உள்ள ஒரு எண்ணெய் ஆலையில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்ததில், அந்த ஆலை தீப்பற்றி எரிந்துள்ளது. மேலும் இந்த குண்டுவெடிப்பில் 2 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, இதுபற்றி போலீஸ் செய்தி தொடர்பாளர் மைக் அபாட்டம் கூறியுள்ளதாவது,  “இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

மேலும் தற்கொலை படை பயங்கரவாதிகள் 2 பேர் தங்களது உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு வந்து, ஆலையை தகர்க்க நுழைந்தபோது அவர்கள் உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த குண்டுகள் வெடித்து, அவர்களின்  உடல் சிதறி பலியாகியுள்ளனர். இவ்வாறு அந்த ஆலை பணியாளர்கள் தெரிவித்ததாக  ஊடக தகவல்கள் கூறுகின்றன.
இதைதொடர்ந்து அந்த ஆலை அமைந்துள்ள பகுதியில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடப்பதை  தடுக்கும் விதத்தில் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக, போலீஸ் செய்தி தொடர்பாளர் மைக் அபாட்டம் தெரிவித்துள்ளார். மேலும் இந்த எண்ணெய் ஆலையை தகர்க்க முயற்சித்ததன் பின்னணி என்ன என்பது  குறித்து உடனடியாக எதுவும் தெரியவில்லை.

Categories

Tech |