நைஜீரியாவில் கடத்தப்பட்ட 317 மாணவிகளை பாதுகாப்புடன் இன்று விடுவிக்கபட்டு உள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் அல்கொய்தா, ஐ .எஸ் மற்றும் போகோஹராம் கடுமையாக ஆதிக்கம் செலுத்தி வருவதால் அவர்களை ஒடுக்கும் விதமாக அந்நாட்டு ராணுவம் ஈடுபட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் , பாதுகாப்பு படையினர் போன்ற ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். மேலும் போகோஹராம் பயங்கரவாதிகள் கிராம மக்களை கொன்று குவித்தும், பள்ளி மாணவ மாணவிகளை தற்கொலைப்படைக்காக கடத்தியும் சென்றுள்ளனர்.
இந்நிலையில் நைஜீரியாவில் ஜாம்பரா மாநிலத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவிகளை கடந்த வெள்ளிக்கிழமை பயங்கரவாதிகள் மோட்டார் சைக்கிளில் வந்து வகுப்பறையில் இருக்கும் 317 மாணவிகளை சிறை பிடித்துள்ளனர். ஆனால் இதில் 279 மாணவிகள் தான் கடத்தப்பதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து ஜாம்பரா மாநில கவர்னர் பெல்லோ மடாவல்லே பயங்கரவாதிகளிடமிருந்து பள்ளி மாணவிகளை எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் பாதுகாப்பாக விடுவித்து விட்டோம் என்று கூறியுள்ளார். இதேபோன்று ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பர் 16ம் தேதி அரசு ஆண்கள் பள்ளிக்கூடம் ஒன்றில் பயின்று வந்த 800 மாணவர்களில் 344 பேர் கடத்தப்பட்டு பின் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.