இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் கூலித்தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள முகில்தகம் ஏசுபுரம் பகுதியில் ஜேசுராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்னறு இருசக்கர வாகனத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக ஜேசுராஜ் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளார்.
இந்த விபத்தில் ஜேசுராஜ் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற தொண்டி காவல்துறையினர் ஜேசுராஜின் உடலை மீட்டு உடற்கூராவிர்க்காக திருவாடனை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.