ஒரே தண்டவாளத்தில் வந்த இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டு விபத்துகுள்ளானது.
ஜெர்மனி நாட்டில் பவேரியாவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு ரயில் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது. இந்த ரயில் எபென்ஹவுசென்-ஷ்லோபட்லார்ன் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது அதே தண்டவாளத்தில் எதிர்திசையில் வந்த இன்னொரு பயணிகள் ரயில் மீது நேருக்கு நேர் மோதிக் கொண்டு கோர விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அப்போது படுகாயம் அடைந்த 40 பேரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் படுகாயம் அடைந்தவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம் ஆகலாம் என தெரிகிறது. இந்த விபத்து குறித்து காரணம் பற்றி தெரியாததால் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.