பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 16 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூரில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மதுரை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது, இந்த பேருந்து புதுக்கோட்டை- காரைக்குடி சாலை கம்மாசட்டி சத்திரத்தில் சென்று கொண்டிருந்த போது தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பேருந்து டிரைவர்கள் உள்பட 16 பேர் காயமடைந்தனர். மேலும் விபத்தில் பேருந்துகளின் முன் பகுதி சுக்குநூறாக நொறுங்கியது.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் விபத்துக்குள்ளான பேருந்துகளை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.