2 அரசு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் மூதாட்டி உள்பட 2 பேருக்கு காயமடைந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியிலிருந்து மதுரை மாட்டுத்தாவணிக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடிக்கு வந்ததுள்ளது. அப்போது அரசு பேருந்தின் மாதாந்திர சுங்க கட்டணம் முடிவடைந்ததால் பேருந்தை மேலும் இயக்கமுடியாது என சுங்கசாவடி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பேருந்தின் ஓட்டுநருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சுங்கச்சாவடி ஊழியர்கள் பேருந்தை அனுமதிக்க மறுத்ததால் வேறுவழியின்றி பேருந்து ஓட்டுனர் தர்மத்துப்பட்டி வழியாக செல்வதற்கு அப்பகுதியில் உள்ள சர்வீஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
இதனையடுத்து அப்பகுதி வழியாக திருமங்கலத்தில் இருந்து பெரியார் பேருந்து நிலையம் செல்வதற்கு அரசு பேருந்து வந்துகொண்டிருந்துள்ளது. இந்நிலையில் இரு பேருந்துகளும் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் பேருந்தின் முன்புறம் அமர்ந்திருந்த ஒரு மூதாட்டி மற்றும் 15 வயது சிறுவனுக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைதொடர்ந்து அரசு பேருந்து ஒன்றுடன் ஒன்று மோதியதால் அப்பகுதியில் சற்று போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.