Categories
மாநில செய்திகள்

நேரில் ஆய்வு… கடலூர் செல்கிறார் முதல்வர்…!!!

கடலூரில் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கடலூர் புறப்பட்டு செல்கிறார்.

தமிழகத்தில் நிவர் புயல் தாக்கத்தினால் கடலோர மாவட்டங்களில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. அதனால் அப்பகுதி முழுவதும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன. மரங்கள் விழுந்ததால் மின்கம்பங்கள் சாய்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் இருந்த கூரை வீடுகள் அனைத்தும் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும் சாலையில் விழுந்த மரங்களை அகற்றும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

அதுமட்டுமன்றி வீடுகளில் சூழ்ந்த மழை நீரை வெளியேற்றும் நடவடிக்கையும் நடந்து கொண்டிருக்கிறது. இந்தநிலையில் கடலூர் மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 2 மணி அளவில் கடலூர் செல்ல உள்ளார். இதனை அடுத்து திமுக தலைவர் ஸ்டாலின் 10:00 மணிக்கு சென்னை சைதாப்பேட்டையில் மலை பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார்.

Categories

Tech |