உக்ரைன் நாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை பாதுகாப்பாகவும் மற்றும் விரைவில் அழைத்து வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
இதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, டாக்டர் கலாநிதி வீராசாமி, எம்.எம். அப்துல்லா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோரை, நான்கு இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களுடன் உக்ரைன் நாடுகளுக்கு அனுப்பி, அங்குள்ள இந்தியத் தூதரகங்களுடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
ஆகவே இதற்குத் தேவையான அனுமதிகளை மத்திய வெளியுறவு அமைச்சகம் விரைவாக வழங்கிட வேண்டுமென்று தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் உக்ரைன் தமிழர்களை மீட்க முதல்வர் மு.க.ஸ்டாலின் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி உக்ரைன் தமிழர்களை மீட்க சிறப்புக் குழு ஒன்றை நியமித்து உள்ளார். இந்தக் குழுவானது உக்ரைனுக்கு நேரடியாக சென்று தமிழர்களை மீட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.