Categories
சினிமா தமிழ் சினிமா

நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான… கேஎஸ் ரவிக்குமாரின் படம்..!!

இயக்குநரும் நடிகருமான கே. எஸ். ரவிகுமார் நடித்துள்ள மதில் என்கிற படம் நேரடியாக ஜீ5 ஓடிடியில் வெளியாகிவுள்ளது.

பிரபல இயக்குநர் கே. எஸ். ரவிகுமார் முக்கிய  கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இந்தப் படத்தை எஸ். எஸ். குழுமத்தின் உரிமையாளர் சிங்கா சங்கரன் தயாரித்துள்ளார். மைம் கோபி, பிக்பாஸ்  மதுமிதா, காத்தாடி ராமமூர்த்தி, லொள்ளு சபா சாமிநாதன் போன்றோர் நடித்துள்ளார்கள்.

இந்தப் படம் பற்றி மித்ரன் ஜவஹர் கூறியதாவது:  மதில் திரைப்படம் தமிழ் நாட்டில் அடிக்கடி நிகழும் முக்கியப் பிரச்னை பற்றி பேசுகிறது. கடினமாக உழைத்து, சேமித்து அதன் மூலம் சொந்த வீடு கட்ட முயற்சிக்கும் அனைவரின் கதை இது.  மதில் படம் இன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகிவுள்ளது. லாக்கப், க/பெ. ரணசிங்கம், முகிலன், ஒரு பக்க கதை ஆகிய படங்கள் ஜீ5 ஓடிடியில் நேரடியாக வெளியாகின. இதையடுத்து மதில் என்கிற படமும் நேரடியாக ஜீ5 ஓடிடியில் வெளியாகிவுள்ளது.

Categories

Tech |