Categories
சினிமா தமிழ் சினிமா

நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் படம்… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திட்டம் இரண்டு திரைப்படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடியில் ரிலீஸாக உள்ளது ‌.

தமிழ் திரையுலகில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் காக்கா முட்டை படத்தில் நடித்து பிரபலமடைந்தவர். இதையடுத்து இவர் தர்மதுரை, கானா, நம்ம வீட்டு பிள்ளை, வடசென்னை போன்ற படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் பூமிகா, மோகன்தாஸ், டிரைவர் ஜமுனா, திட்டம் இரண்டு  உள்ளிட்ட பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள திட்டம் இரண்டு படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.

சிக்ஸர் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் மினி ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோகுல் பினாய் இசையமைத்துள்ளார். இந்நிலையில் திட்டம் இரண்டு திரைப்படம் நேரடியாக சோனி லைவ் ஓடிடியில் ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதில் இந்த படத்தின் டிரைலர் நாளை வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. டிரைலருடன் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |