Categories
தேசிய செய்திகள்

நேபாள நிலச்சரிவு… பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு…!!!

நேபாள நிலசரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

நேபாள நாட்டில் பருவமழை தொடங்கி இருப்பதால் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. சில நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகள் முழுவதும் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொரோனா பாதிப்புகளில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், கன மழை மற்றும் வெள்ளத்தினால் வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழை நீரில் நீந்தி செல்லும் நிலைக்கு மக்கள் ஆளாகியுள்ளனர். அதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக முடங்கியுள்ளது. இதுபற்றி தகவலறிந்த நேபாள ராணுவம், ஆயுதக் காவல் படை மற்றும் நேபாள காவலர்கள் என 150 பாதுகாப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசாத் கூறுகையில்,” இந்தப் பகுதியில் நிலச்சரிவு ஆபத்து அதிகம் ஏற்படும். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 11 அவர்களின் உடல்கள் கடந்த வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளன. மேலும் 2 குழந்தைகள் உட்பட 7 பேரின் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. எங்களிடம் இருக்கின்ற குறைந்த அளவிலான மீட்பு சாதனங்களை பயன்படுத்தி கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றோம்” என்று அவர் கூறியுள்ளார்.

இதுவரை நேபாள நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. அதுமட்டுமன்றி சம்பவ பகுதியை சேர்ந்த 21 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேபாளத்தில் பெய்து கொண்டிருக்கும் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவு களால் கடந்த ஜூலை மாதம் இறுதியில் 113 பேர் பலியாகியுள்ளனர். 67 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் 38 பேரை காணவில்லை என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது.

Categories

Tech |