Categories
உலக செய்திகள்

நேபாளத்தில் பேருந்து கவிழ்ந்ததில்… 14 பயணிகள் பரிதாப பலி…!!!

நேபாள நாட்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 14 பயணிகள் பரிதாபமாக உயிர் இழந்தனர்

நேபாள நாட்டில் அமைந்துள்ள காலின்சவுக் பகுதியில் இருக்கும் புனித தலத்தில் இருந்து பக்தாபூர் என்ற நகருக்கு 40 நபர்களுடன் பேருந்து ஓன்று சென்றது. அந்த பேருந்து இன்று காலை சிந்துபால்சவுக் மாவட்டத்தில் அமைந்துள்ள சுன்கோஷி வழியில் செல்லும் போது பயங்கரமான வளைவில் திரும்பியது. அப்பொழுது, பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததால் அருகில் இருந்த பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது.

Image result for nepal bus Valley accident"

இந்த விபத்தால் 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றன. இதில் சிகிச்சை பலனின்றி மேலும் 2 பேர் உயிரிழந்தனர். மொத்தமாக 14 நபர்கள் இதில் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |