Categories
மாநில செய்திகள்

நெல் மூட்டைகளை பாதுகாக்க வேண்டும்… ஓபிஎஸ் வேண்டுகோள்…!!!

நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க வேண்டுமென ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: மதுரை மாவட்டம் தொப்பூர் அருகே ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன. இரண்டு தினங்களுக்கு முன்பு கள்ளகுறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா திறந்தவெளியில் தார்பாய் போட்டு மூடப்பட்டு, மூடப்படாமல் குவியலாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் கடந்த 2 நாட்களாக பெய்த மழையில் நனைந்து சேதமடைந்தது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் வானிலை ஆய்வு மையம் எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பு இருக்கின்றது என்ற தகவலை தினசரி அறிவித்து வருகின்றது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தகவலுக்கு ஏற்ப நடவடிக்கை எடுத்திருந்தால் இதுபோன்ற சேதங்களை தவிர்த்திருக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படாததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி உள்ளது. இதை அரசு சரி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் மத்திய மாநில அரசு கிடங்குகள், காலி அரசு கட்டிடங்களில் நெல்மூட்டைகள் பாதுகாப்பாக வைக்க வேண்டும். தஞ்சை திருச்சி மாவட்டங்களில் திறந்தவெளியில் இருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தது மிகுந்த வேதனையை அளிக்கிறது என அவர் தெரிவித்தார்.

Categories

Tech |