Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை- திருச்செந்தூர் சிறப்பு ரயில்கள் இயக்கம்… ரயில்வே நிர்வாகத்தின் அறிவிப்பு…!!

திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு நாளை சூரசம்ஹார விழா சிறப்பாக நடைபெற உள்ளது. இந்நிலையில் கோவிலுக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் தெற்கு ரயில்வே சார்பில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு ரயில் (எண் 06910) இயக்கப்படுகிறது.

இந்த ரயில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு 10.30 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும். மறு மார்க்கத்தில் ரயில் (எண் 06909) திருநெல்வேலியில் இருந்து இரவு 11.05 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 12:30 மணிக்கு திருச்செந்தூரை வந்தடைகிறது. இந்த ரயில்கள் ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Categories

Tech |