Categories
மாநில செய்திகள்

நெல்லை, திருச்செந்தூருக்கு இனிமேல் 110 கி.மீ. வேகத்தில் செல்லலாம்…. ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்…..!!!!!

நாடு முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் ரயிலில் பயணிக்கின்றனர். ஏழை எளிய சாமானிய மக்களும் பயணம் செய்ய ஏதுவாக ரயில்வே துறை குறைந்த கட்டணத்தில் டிக்கெட் விலையை நிர்ணயம் செய்துள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூருக்கு 61 கிலோமீட்டர் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை, பாலக்காடு, வாஞ்சி மணியாச்சி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இருந்து 7 ரயில்கள் திருச்செந்தூருக்கு இயக்கப்படுகின்றன. இந்த ரயில்கள் தற்போது 70 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்பட்ட வரும் நிலையில் வேகத்தை அதிகரிக்க ரயில் பாதையை பலப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது.

ரயிலின் வேக சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளதால் திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் செல்லும் ரயில் இன்னும் ஒரு மாதத்திற்குள் 110 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைப் போலவே செங்கோட்டை -கொல்லம், திண்டுக்கல்-பழனி-பொள்ளாச்சி, மதுரை மற்றும் விருதுநகர் ஆகிய பகுதிகளில் லூப் லைனில் ரயில்கள் 15 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதன் வேகம் 30 கிலோமீட்டர் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |