Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

நெல்லை-தாம்பரம் சிறப்பு ரயில் சேவை…. நிரந்தரமாக்க வலியுறுத்தி பயணிகள் கோரிக்கை….!!!!

ரயில்வே நிர்வாகத்திற்கு பொதுமக்கள் முக்கிய கோரிக்கையை விடுத்துள்ளனர்.

இன்றைய காலகட்டத்தில் போக்குவரத்து என்பது பொதுமக்களின் அத்தியாவசிய தேவையாகவே மாறிவிட்டது. இந்த போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்வது அரசின் தலையாய கடமையாகும். இந்த போக்குவரத்திற்காக பேருந்துகள், ரயில்கள், விமானங்கள் போன்ற பல வாகனங்கள் இருந்தாலும் ரயிலில் செல்வதற்கே மக்கள் விரும்புகின்றனர். ஏனெனில் ரயிலில் செல்வது மிகவும் பாதுகாப்பாக இருப்பதோடும், கட்டணமும் குறைவு என்பதால் பெரும்பாலான மக்கள் ரயில் சேவையை விரும்புகின்றனர். இதன் காரணமாக ரயில்வே நிர்வாகம் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் வழக்கமாக இரவு 7 மணிக்கு நெல்லையிலிருந்து கிளம்பும். ஆனால் தற்போது இரவு 7:20 மணிக்கு நெல்லையிலிருந்து கிளம்பும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் இரவு 7:20 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 9:20 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும். இதேபோன்று தாம்பரத்திலிருந்து திங்கட்கிழமை இரவு 10:20 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 10:40 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும்.

இந்நிலையில் திருநெல்வேலியில் இருந்து 7:20 மணிக்கு புறப்படும் ரயில் சேரன்மகாதேவிக்கு 7:43 மணிக்கு, அம்பைக்கு 8 மணிக்கு, கடையத்துக்கு 8:15 மணிக்கு, பாவூர்சத்திரத்துக்கு 8:32 மணிக்கும், தென்காசிக்கு 9:20 மணிக்கு, ராஜபாளையத்துக்கு 10:20மணிக்கு, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு 10:34 மணிக்கும், சிவகாசிக்கு 10:52 மணிக்கும், விருதுநகருக்கு 11:35 மணிக்கும், மதுரைக்கு நள்ளிரவு 1:20 மணிக்கும் போகும். அதன்பின் காலை 9:20 மணியளவில் தாம்பரத்தை சென்றடையும். இந்த ரயில் சேவை வருகிற ஞாயிற்றுக்கிழமையுடன் முடிவடைவதால் இதற்கான கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பதுடன், சிறப்பு ரயில் சேவையை நிரந்தரமாக வேண்டும் எனவும் பொதுமக்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |