Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“நெல்லையில் நடைபெற்ற 7பி தேர்வு”…. 1061 பேர் மட்டுமே பங்கேற்பு…!!!!!

திருநெல்வேலியில் நடைபெற்ற 7 பி தேர்வில் 1061 பேர் எழுதினார்கள்.

நேற்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பாக குரூப் 7பி மற்றும் குரூப் 8 தேர்வுகள் நடந்தது. இதில் திருநெல்வேலி மாவட்டத்தில் குரூப் 7பி தேர்வானது நேற்று நடந்தது. இத்தேர்விற்கு மொத்தம் 2078 பேர் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் 1061 பேர் மட்டுமே வந்தார்கள். மொத்தம் தேர்வு எழுதிய சதவீதம் 51.05 மட்டுமே.

இந்த தேர்வு எழுதும் அறைக்கு செல்போன்கள், கால்குலேட்டர் சாதனங்கள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. டவுன் சாப்டர் பள்ளியில் நடைபெற்ற தேர்வை மாவட்டம் வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, டிஎன்பிஎஸ்சி அலுவலர் நேரு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

Categories

Tech |