நெல்சன் இயக்கிய வேட்டை மன்னன் திரைப்படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் பேசியுள்ளார்.
நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் நெல்சன். இவர் தனது முதல் படத்திலேயே வெற்றி வாகை சூடினார். அதன்பின் சிவகார்த்திகேயனுடன் இணைந்து டாக்டர் படத்தை இயக்கினார். இத்திரைப்படம் ஹிட்டானது. இதையடுத்து விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன்.
நெல்சன் முதல் முதலில் இயக்கிய வேட்டை மன்னன் திரைப்படம் பற்றி பேசி உள்ளார். சிம்பு மற்றும் ஜெய் நடிப்பில் 2010ஆம் வருடம் உருவான வேட்டை மன்னன் படம் சில காரணங்களால் இடையிலேயே டிராப்பானது. இதுபற்றி சிவகார்த்திகேயன் கூறியுள்ளதாவது, டார்க் காமெடி கதை காலத்தில் உருவான திரைப்படம் தான் வேட்டை மன்னன். நானும் நெல்சனும் பேசிக்கொள்ளும்போது வேட்டை மன்னன் படத்தை டிராப் என கூற மாட்டோம் என கூறியுள்ளார். இதைக் கேட்ட ரசிகர்கள் வேட்டை மன்னன் படம் ட்ராப் இல்லை என்றால் மீண்டும் துவங்கப்படுகின்றதா என ரசிகர்கள் ஆர்வமாக கேட்கிறார்கள். நெல்சன் தற்போது பீஸ்ட் படத்தை தொடர்ந்து ரஜினியின் 169-வது படத்தை இயக்க உள்ளார் குறிப்பிடத்தக்கது.