நெற்பயிற்களை மழைநீர் சூழ்ந்ததால் விவசாயிகள் மிகுந்த கவலையில் இருக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியத்தில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இந்த மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்களை மழை நீர் சூழ்ந்துள்ளது. இந்த நிலத்தில் மழை நீர் தேங்கி இருப்பதால் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள் அனைத்தும் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மனவேதனையில் இருக்கின்றனர். மேலும் அதிகாரிகள் இது தொடர்பாக ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.