Categories
மாநில செய்திகள்

நெருங்கும் புயல்….. வெளியான புகைப்படம்…. 24 மணி நேரத்திற்கு இதை செய்யாதீங்க…. மக்களுக்கு எச்சரிக்கை….!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் அடுத்த 48 மணி நேரத்தில் மாமல்லபுரம் – காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என கூறப்பட்டது. அதேபோல் இந்த புயல் கரையை கடக்கும் போது தமிழகத்தில் 4,133 இடங்கள் பாதுகாப்பற்றவையாக  இருக்கும் எனவும் அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில்,

வங்கக் கடலில் உருவாகியுள்ள இந்தப் புயலின் செயற்கைக்கோள் புகைப்படம் மற்றும் கரையிலிருந்து புயல் மையத்தின் தூரம்  ஆகியவை தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது, குறைந்தபட்சம் 24 மணி நேரத்துக்கு வெளியில் செல்வதை மக்கள் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். மக்கள் தாழ்வான பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், அரசின் வழிகாட்டுதல்களை உரியமுறையில் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |