Categories
மாநில செய்திகள்

நெருங்கும் பருவமழை….. அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு….. தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை….!!!

வரக்கூடிய பருவமழை காலகட்டத்தில் டெங்கு கொசு அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அதனால் கவனமுடன் இருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

கொசுவினால் ஏற்படக்கூடிய டெங்கு நோய் பாதிப்பு குறித்த புள்ளிவிவர பட்டியலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 2017 ஆம் ஆண்டு 23 ஆயிரத்து 294 பேருக்கு டெங்கு பாதிப்பும் , அதனால் 65 பேரும் உயிரிழந்தனர். அதேபோல் 2018 ஆம் ஆண்டு 4,486 பேருக்கு டெங்கு பாதிப்பும் 13 பேரும் உயிரிழந்தனர். 2019 ஆம் ஆண்டு 8,127 பேருக்கு பாதிப்பும், ஐந்து பேர் உயிரிழந்தனர் .

2020 ஆம் ஆண்டு 2,410 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. கடந்த ஆண்டு 6,039 பேருக்கு பாதிப்பும் எட்டு பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு இதுவரை 3,025 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாலும் உயிர் இழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. வரக்கூடிய பருவமழை காலகட்டத்தில் டெங்கு கொசு உற்பத்தி அதிகரிக்கும் அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,  சுகாதாரம் மற்றும் உள்ளாட்சித் துறை பணியாளர்கள் கொசு ஒழிப்பில் ஈடுபட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |