Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நெருங்கும் தேர்தல்…. பறிமுதல் செய்யப்படும் லட்சக்கணக்கான பணம்…. பறக்கும் படையினர் அதிரடி…!!

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் மதுரையில் பறக்கும் படையினர் 1,40,000 பணத்தை பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் 2021 க்கான சட்டசபை தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ம் தேதி நடக்கவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து தேர்தல் குழுவினர் ஆங்காங்கே பறக்கும் படையினரை நியமித்துள்ளனர். இவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி பணமோ அல்லது பொருட்களோ எடுத்துச் சென்றால் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொள்வார்கள்.

இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூரிலுள்ள சுங்கசாவடியில் பறக்கும் படையினர், தாசில்தார் செந்தாமரை தலைமையில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது சென்னையிலிருந்து மதுரை நோக்கி வந்த காரை சோதனை செய்தனர் . அப்போது அந்தக் காரில் உரிய ஆவணங்கள் இன்றி ஒரு லட்சத்தி 40 ஆயிரம் இருந்ததால் அதனை கைப்பற்றினர். மேலும் கார் ஓட்டுனரை விசாரணை செய்ததில் அவர் சாத்தூரை சேர்ந்த கருப்பசாமி என்பது தெரியவந்தது.

Categories

Tech |