நகங்களில் நெயில் பாலிஷ் தடவியது,ம் உடனே காய வைப்பது எப்படி என்று இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
பொதுவாக விரல்களில் நெயில் பாலிஷ் தடவிய பின்பு அதை அப்படியே சில மணி நேரம் வைத்திருந்தால் தான் பாலிஷ்ஷானது நன்கு காய்ந்து நகங்களில் ஒட்டி விடும்.
நெயில்பாலிஷை காயவைப்பதில் சிலருக்கு அவ்வளவு நேரம் அமர்ந்து இருக்கும் அளவுக்கு பொறுமை இருக்காது. அவர்களுக்காக நெயில் பாலிஷ் போட்டதும் உடனே காய வைப்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்:
விரலில் நெயில் பாலிஷ் வைத்ததும், அதன் மேல் தேங்காய் எண்ணெயை எடுத்து அதன்மேல் தடவி வைத்தால் எண்ணெயை உறிஞ்சதும்,நெயில் பாலிஷ் உடனே காய்ந்துவிடும்.
நெயில் பாலிஷ் வைத்துவிட்டு சிலருக்கு முடி காய வைக்கும் ஹேர் ஸ்பிரேயை பயன்படுத்தி விரல்களில் ஸ்பிரே செய்தால் உடனே அந்த நொடிபொழுதில் நெயில் பாலிஷ் காய்ந்துவிடும்.
நெயில் பாலிஷ் வைத்ததும், தண்ணீரில் பாலிஷ் போட்ட விரல்களை முக்கி எடுத்தால் உடனே காய்ந்துவிடும்.
டேபில் ஃபேன் இருந்தால் அதை சுழல விட்டு, அதில் நெயில் பாலிஷ் வைத்த விரல்களை காற்றில் படும்படி வைத்தால் எளிதில் நெயில் பாலிஷ் காய்ந்துவிடும்.