Categories
விளையாட்டு

நெதர்லாந்து VS நியூசிலாந்து…. சதம் அடித்த டாம் லாதம்…. 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற டீம்….!!!!!

நெதர்லாந்து அணியினர் 3 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சென்றது. டி20 போட்டி மழையின் காரணமாக  டாஸ் கூட போடாத நிலையில் போட்டி நடக்கவில்லை. இதையடுத்து சென்ற மாதம் 29ஆம் தேதி முதல் ஒருநாள் போட்டி நடந்தது. அதில் நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. அதன்பின்  இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடந்தது. இதில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

நியூசிலாந்து அணிவீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிக் கொடுத்தனர். அதாவது அந்த 32 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை எடுத்து தடுமாறியது. லாதம்-கிராண்ட்ஹோம் கொஞ்சம் நேரம் தாக்குப் பிடித்தனர். 16 ரன்கள் எடுத்த சூழலில் கிராண்ட்ஹோம் அவுட்டானார். அதனை தொடர்ந்து லாதம்-வுடன் பிரேஷ்வேல் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். ஒருபக்கம் நிலைத்து ஆடிய லாதம் சிறப்பாக ஆடி சதமடித்தார்.

முடிவில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 264 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சம் லாதம் 140 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதனிடையில் நெதர்லாந்து தரப்பில் வான் பீக் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 265 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் நெதர்லாந்து அணி களம் இறங்கியது. முதல் 2 விக்கெட்டுகள் உடனடியாக சரிந்த நிலையில், விக்ரம்ஜித் சிங்-பாஸ் டி லீடே ஜோடி நிதானமாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

81 ரன்கள் எடுத்த சூழலில் விக்ரம்ஜித் சிங் அவுட்டானார். பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேற 34.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து நெதர்லாந்து அணி 146 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணியானது 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்து தொடரையும் கைப்பற்றியது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து அணி 2-0 எனும் கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 3வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெறும்.

Categories

Tech |