Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

நெதர்லாந்து இல்லன்னா அவ்ளோ தான்..! எங்க கிட்ட யாரும் மோத நெனைக்கமாட்டாங்க…. 3 அணிகளுக்கு எச்சரிக்கை கொடுத்த ஹெய்டன்…!!

யாரும் இப்போது எங்களை எதிர்கொள்ள விரும்ப மாட்டார்கள் என்று பாகிஸ்தான் அரையிறுதி இடத்தைப் பிடித்த பிறகு ஆலோசகர் மேத்யூ ஹைடன் மிகப்பெரிய எச்சரிக்கையை விடுத்தார்.

டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டியில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக தொடர்ந்து இரண்டு தோல்விகளை பெற்ற பிறகு அரையிறுதிக்குள் நுழைவது எல்லாம் சாத்தியம் இல்லை என்று நான் அனைவரும் நினைத்தனர். ஆனால் அதன்பின் தொடர்ந்து 3 வெற்றிகளை பெற்று தற்போது அரையிறுதிக்குள் நுழைந்து பலமிக்க அணியாக இருக்கிறது. அதோடு கொஞ்சம் லக்கும் பாகிஸ்தானுக்கு இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். கடைசியாக சூப்பர் 12 போட்டியில் நெதர்லாந்து அணி தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்ததால் பாகிஸ்தான் வங்கதேச அணியை வீழ்த்தி அதிர்ஷ்டத்தால் உள்ளே வந்துள்ளது.

ஒருவேளை அந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றிருந்தால் இந்தியா ஜிம்பாப்வேக்கு எதிராக தோற்க வேண்டும் என்று பாக்.,ரசிகர்கள் நினைத்து இருப்பார்கள். ஏனென்றால் இந்தியா ரன்ரேட்டில் பாகிஸ்தானை விட குறைவாக இருந்தது.. ஆனால் அப்படி எதுவுமே நடக்காமல் நெதர்லாந்து உதவியுடன் உள்ளே வந்துள்ளார்கள். பாகிஸ்தான் ரசிகர்களால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத நாள் நெதர்லாந்து தென்னாபிரிக்காவை வீழ்த்தியது தான். தற்போது நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளன. முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நாளை (நவ.09) நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.

இப்போது பாகிஸ்தான் தனது இரண்டாவது டி 20 உலகக் கோப்பையை கைப்பற்றுவதற்கு இரண்டு வெற்றியை எதிர்நோக்கி உள்ளது. மேலும் இழக்க எதுவும் இல்லாத இந்த அணி மிகவும் ஆபத்தானது, யாரும் எங்களை எதிர்கொள்ள விரும்ப மாட்டார்கள் என்று அணியின் வழிகாட்டியான மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.

பங்களாதேஷுக்கு எதிரான பாகிஸ்தான் வெற்றிக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) வெளியிட்ட வீடியோவில் பேசிய ஹேடன், ” நாங்கள் முதல் 2 போட்டிக ளில் தோல்வியடைந்த பின் இந்த தொடரில் இருந்து வெளியேறி விடுவோம் என்ற சாத்தியக்கூரான யோசனைகள் இருந்தது. அந்த நிலையிலிருந்து சூப்பர் பார்முடன் பாகிஸ்தான் அணியினர் வீறுகொண்டு எழுந்து மற்ற அணிகளுக்கு அச்சுறுத்தலாக மாறி இருக்கின்றனர்.

இப்போட்டியில் இப்போது எங்களை எதிர்கொள்ள இந்த உலகில் உள்ள எந்த ஒரு அணியும்  விரும்ப மாட்டார்கள். எங்களை வெளியேற்ற வேண்டும் என்று நினைத்தார்கள். இப்போது, ​​அவர்கள் எங்களை தோற்கடிக்க போவதில்லை.” நெதர்லாந்து இல்லையென்றால், ஒருவேளை, நாங்கள் இங்கே இருந்திருக்க மாட்டோம். இப்போது நாங்கள் இங்கே இருக்கிறோம், அது சக்தி வாய்ந்தது, ஏனென்றால் யாரும் எங்களை இங்கு (அரையிறுதி) பார்க்கவிரும்பியிருக்க மாட்டார்கள், அதுதான் எங்களுக்கு ஆச்சர்யமான அம்சம்,” நங்கள் இதனை சாதகமாக பெற்றுள்ளோம் என்று கூறினார். அதாவது இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து ஆகிய 3 அணிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக கருத்தை கூறியுள்ளார் ஹெய்டன்.

நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதிக்கு பாகிஸ்தான் நம்பிக்கையுடன் இருக்கும், ஏனெனில் இந்த இரு அணிகளும் கடைசியாக சந்தித்தது, டி 20 உலகக் கோப்பைக்கு சற்று முன்பு முத்தரப்பு தொடரின் இறுதிப் போட்டியில் மோதியது, இதில் மென் இன் கிரீன் வென்றது..

Categories

Tech |