Categories
உலக செய்திகள்

நெதர்லாந்தின் அமெரிக்க தூதராக இந்திய பெண்… அமெரிக்க அதிபர் ஜோபைடன் அறிவிப்பு…!!!

நெதர்லாந்து நாட்டிற்கான அமெரிக்க தூதராக இந்திய பெண்ணை அதிபர் ஜோ பைடன் நியமித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தன் அரசாங்கத்தில் இந்திய வம்சாவளியினருக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அதன்படி, அமெரிக்க அரசாங்கத்தின் பல அதிகாரமிக்க பொறுப்புகளில் இந்திய வம்சாவளியினர் இருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது இந்திய பெண்ணை அதிபர் ஜோபைடன் நெதர்லாந்து நாட்டிற்கான அமெரிக்க தூதராக நியமனம் செய்திருக்கிறார்.

இந்தியாவைச் சேர்ந்த ஷெபாலி ரஸ்தான் துகல் என்ற 50 வயது பெண் காஷ்மீரிலிருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்திருக்கிறார். இவர் அமெரிக்காவின் பிரபல அரசியல் செயல்பாட்டாளராகவும் உள்ளார். இது பற்றி வெள்ளை மாளிகை அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, இரண்டு குழந்தைகளின் தாயான இவர் அரசியல் செயல்பாட்டில் அனுபவசாலி.

பெண்கள் உரிமைகளுக்கான வழக்கறிஞராகவும், மனித உரிமை ஆர்வலராகவும், பன்முகங்கள் உடையவர். இவர் முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆட்சியின் போது பல முக்கிய பதவிகளில் இருந்திருக்கிறார் என்று கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |