Categories
அரசியல்

நெடுஞ்சாலை திட்டம்….! தமிழக அரசு முட்டுக்கட்டையா இருக்கா….? பதில் சொல்லுங்க…. கேள்வி கேட்கும் ராமதாஸ்….!!!!

மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மாநில அரசு முட்டுக்கட்டை போடுவதாக இருந்தால் புகாருக்கு மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசு செயல்படுத்திவரும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மாநில அரசு தடை விதிப்பதாக பலர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இது குறித்து மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும். என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நெடுஞ்சாலை திட்டங்களை உருவாக்கி அதன் மூலம் இந்திய மக்கள் பயன்பெற வேண்டுமென நாங்கள் தொடர் முயற்சி எடுத்து வருகிறோம். இதற்கு ஸ்டாலின் ஒத்துழைப்பு தர வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார் இது அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஒரு விஷயமாகும். மேலும் இவ்வாறான குற்றச் சாட்டு ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக முன்வைக்கப்படுகிறது.

இவ்வாறான தமிழக அரசின் மீது சாட்டப்படும் குற்றங்கள் குறித்த உண்மை நிலையை தமிழக அரசு வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். மேலும் நெடுஞ்சாலைகள் நாட்டிற்கு மிகவும் அத்தியாவசியமானவை. இதுபோன்ற நெடுஞ்சாலை திட்டங்களை வேகமாக செயல்படுத்த மாநில அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். சேலம் எட்டு வழி சாலை திட்டம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எனவே அந்த திட்டம் முடக்கி வைக்கப்பட்டுள்ள தில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் மற்ற நெடுஞ்சாலை திட்டங்களை முடக்கி வைப்பது எந்த லாபமும் இல்லை. எனவே இதனை செயல்படுத்த அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக சார்பில் கேட்டுக் கொள்கிறேன்..!” இவ்வாறு அவர் கூறினார்.

Categories

Tech |