தற்போதைய காலகட்டத்தில் ஒரு சின்ன தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரையை தான் தேடுகிறார்கள். ஆனால் நம் முன்னோர்கள் காலத்தில் இயற்கை மருத்துவங்கள் அனைத்து நோய்களுக்கும் உதவின. அதனை நாம் அனைவரும் இப்போது மறந்துவிட்டோம். அவ்வாறு உடலிலுள்ள பல பிரச்சனைகளுக்கு இயற்கை மருத்துவமே மிக சிறந்தது.
அதன்படி இருமல், ஜலதோஷத்துக்கு ஓமவல்லி ஒரு முக்கிய மருந்தாகும். ஓமவல்லி இலையை சாறு எடுத்து லேசாக சூடுபடுத்தி தேன் கலந்து குடித்தால் இருமல் மற்றும் மார்பு சளி சரியாகும். காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் ஓமவள்ளி இலையில் சிறிது கருப்பட்டி வைத்து சாப்பிட்டால் வயிறு உபாதைகள் நீங்கும். மழை மற்றும் குளிர்காலத்தில் மாலை நேர சிற்றுண்டியாக ஓமவல்லி இலையை பச்சையாக செய்து சாப்பிடலாம்.