விஜய் படம் என்றாலே எதிர்பார்ப்புக்கு எப்போதும் பஞ்சமிருக்காது. அதேபோல் விஜய் நடிப்பில் தற்போது வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் மீதும் அதிக ஆர்வம் இருந்தது. ஆனால் இந்த படம் வெளியானதை தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. அதிக அளவில் நெகடிவ் விமர்சனங்கள் வருவதால் படக்குழுவினர் சற்று அச்சத்தில் உள்ளனர். அதுவும் கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றி படங்களை இயக்கிய நெல்சன் விஜயை வைத்து படம் இயக்குகிறார் என்று கூறியவுடன் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் படம் தொடர்பாக பலவித விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தற்போது விஜய் நெல்சனுக்கு கால் செய்து ஆறுதல் கூறினாராம். விமர்சனங்களை மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம். நாம் மீண்டும் இணைந்து ஒரு படம் செய்யலாம் என்று தெரிவித்தாராம். பீஸ்ட் படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் இருப்பதாகவும், ஒட்டுமொத்த எதிர்பார்ப்பையும் நெல்சன் சொதப்பி விட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.