Categories
மாநில செய்திகள்

நூல் விலை உயர்வு கட்டுப்படுத்தப்படும்….. வெளியான முக்கியஅறிவிப்பு….!!!!

நூல் விலை குறைக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கமணி, ஜே.ஜே பிரின்ஸ், ஜி.கே மணி, வேல்முருகன், ஈ.ஆர் ஈஸ்வரன், ராமச்சந்திரன் ஆகியோர் நூல் விலை உயர்வு குறித்து விவாதம் நடத்தினார்கள். இதற்கு துணிநூல் மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி விளக்கம் அளித்துள்ளார். அவர் பருத்தி இறக்குமதிக்கு மத்திய அரசால் விதிக்கப்பட்ட 11 சதவீத வரியை நீக்க வேண்டும். அதன்பிறகு பருத்தி ஏற்றுமதியை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை மத்திய அரசிடம் தமிழக அரசு வைத்துள்ளது.

இந்த கோரிக்கைகள் குறித்து ஜவுளித்துறை அமைச்சகத்துடன் கலந்து ஆலோசனை நடத்தப்படும். இதனையடுத்து நூல் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்றார். மேலும் அமைச்சர் தங்கம் தென்னரசு நூல் விலை உயர்வால் தமிழகத்தில் பருத்தி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சினை மீது முதல்வர் ஸ்டாலின் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நூல் விலையை குறைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமைச்சர் கூறினார்.

Categories

Tech |