Categories
தேசிய செய்திகள்

நூலிழையில் உயிர் தப்பிய சிறுவன்….பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி…!!!

சைக்கிளில் ரோட்டை கடக்க முயன்ற சிறுவன் ஒருவன் நூலிழையில் உயிர் தப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்திலுள்ள தளிபரம்பா அருகே உள்ளது சொருக்காலா என்ற கிராமம். இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த விபத்து ஒன்றில் சிறுவன் ஒருவன், தனது சைக்கிளில் ரோட்டை கடக்க முயல்கின்றான்.அப்போது ரோட்டில் சென்று கொண்டிருந்த ஒரு பைக்கின் மீது மோதி தூக்கி வீசப்படுகிறான்.

அதே சமயம் பின்னால் வந்த பேருந்தின் சக்கரத்தில் சிக்காமல் நூலிழையில் தப்பித்துள்ளான். ஆனால் அவனது மிதிவண்டி பேருந்தில் சிக்கி சுக்கு நூறானது. அதேநேரம் சிறுவனுக்கு பெரிய ஆபத்து ஏற்படாமல், சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளான். மேலும் தற்போது இது குறித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

This incident happened 2 days ago in Kerala. Miraculous mode ! The boy survived .@navinupadhyay0pic.twitter.com/cVlbG8TO1a

— Madhu S (Mr) ?? – (@mbmclass1990) March 23, 2022

Categories

Tech |