Categories
உலக செய்திகள்

நூலிலையில்உயிர் தப்பிய பிரதமர்…. மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!

பிரதமர் அப்துல் ஹமீத் திபய்பா மீது மர்ம நபர்கள் கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லிபியா நாட்டில் உள்நாட்டு  போர் நடந்து வருகிறது. இந்நிலையில் அந்நாட்டின் பிரதமர் அப்துல் ஹமீத் திபய்பா மீது கொலை முயற்சி செய்துள்ளனர். இவர் காரில் திரிபோலிக்கு சென்று கொண்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மர்ம நபர்கள் காரின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் பிரதமருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும் துப்பாக்கி சூடு நடத்திய அந்த மர்ம நபர்கள் தப்பித்து சென்றுள்ளனர். இந்த கொலை முயற்சி சம்பவம்  லிபியா நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |