Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“நூதன முறையில் நகை, பணத்தை அபேஸ் செய்த முதியவர்”… போலீஸார்விசாரணை…!!!

பரிகார பூஜை செய்வதாக நூதன முறையில் நகை, பணத்தை எடுத்துச் சென்ற முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள திருச்சுழி அருகே இருக்கும் பச்சேரி கிராமத்தில் வாழ்ந்து வருபவர் கூலித்தொழிலாளி ராஜசேகர் (60). இவர் சொந்த வேலையின் காரணமாக அருப்புக்கோட்டைக்கு பஸ்ஸில் சென்று விட்டு மீண்டும் திருச்சி அருகே பஸ்சில் வந்து கொண்டிருந்த பொழுது பஸ்ஸில் இருந்த 80 வயதுடைய ஒருவர் உனக்கு தோஷம் உள்ளது. அதற்காக பரிகாரம் செய்ய வேண்டும் எனவும் நாளை நான் உனது வீட்டிற்கு வருகிறேன் என கூறியுள்ளார். மேலும் பரிகாரம் செய்வதற்காக உன் வீட்டிலுள்ள நகை மற்றும் பணத்தை ஒரு பையில் போட்டு கட்டி வைத்து அதை வைத்து பூஜை செய்ய வேண்டும் என கூறிவிட்டு சென்றுள்ளார்.

அதற்குப்பின் அந்த நபர் ராஜசேகரிடம் போன் செய்து உனக்கு பரிகாரம் செய்ய வேண்டும் எனவும் நான் திருச்சுழியில் இருக்கின்றேன் என கூறியுள்ளார். இதனால் ராஜசேகர் திருச்சுழி சென்று அந்த முதியவரை பச்சேரியில்  இருக்கும் தனது வீட்டிற்கு அழைத்து வந்து பரிகார பூஜை செய்து இருக்கின்றார். பூஜை செய்த பின்னர் பணம், நகை கட்டி வைத்திருந்த அந்த பையை காணோம். முதியவர் பூஜை செய்துவிட்டு நூதன முறையில் அந்த பையை ஏமாற்றி சென்றுள்ளார். இதனால் ராஜசேகர் திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏமாற்றிச் சென்ற அந்த முதியவரை தேடி வருகின்றார்கள்.

Categories

Tech |