Categories
தேனி மாவட்ட செய்திகள்

நுற்றாண்டு விழாவை முன்னிட்டு…. நடைபெற்ற கட்டுரை போட்டி…. ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவர்கள்….!!

அரசு மருத்துவமனையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு கட்டுரை போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மருத்துவமனையின் நூற்றாண்டு விழா தென்கரை கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நல்லாசிரியர் சிவபாலன், வக்கீல் சங்க முன்னாள் தலைவர் சந்திரசேகர் அவர் தலைமை தங்கியுள்ளனர்.

மேலும் அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் குமார், பெரியகுளம் துணை சூப்பிரண்டு அதிகாரி முத்துக்குமார், நிலைய அலுவலர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளனர். மேலும் இன்ஜினியர் நித்தியானந்தம், நூலக ஆர்வலர் அன்புக்கரசன், வக்கீல் மணி கார்த்திக், மாணவ மாணவிகள் என பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.

Categories

Tech |