நுபுர் சர்மாவை கொல்ல சதித்திட்டம் தீட்டிய கும்பலை சேர்ந்த தீவிரவாதி ஒருவர் ரஷ்யாவில் கைதான நிலையில் அவன் துருக்கியில் இருந்து மாஸ்கோ சென்ற விவரங்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் ரஷ்யாவின் மத்திய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் மத்திய ஆசிய பிராந்தியத்தில் உள்ள ஒரு நாட்டைச் சேர்ந்த நபரை கைது செய்து இருக்கின்றோம். அந்த நபர் ரஷ்யாவில் தடை செய்யப்பட்ட ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த நபர் இந்திய தலைவர் ஒருவர் மீது தற்கொலை படை தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தது தெரியவந்துள்ளது.
அந்த நபர் ஆளுங்கட்சி வட்டாரத்துடன் தொடர்புடையவர் எனவும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் அவரை கொலை செய்வதற்காகவே இந்த நபரை துருக்கியைச் சேர்ந்த சிலர் பயிற்சி கொடுத்து தயார் செய்து இருக்கின்றனர் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய புலனாய்வு அமைப்புகள் ரஷ்யாவில் பெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் எழுதியுள்ள கடிதத்தில் பாஜகவின் முன்னாள் செய்தி தொடர்பாளர் நுகூர் சர்மாவை பழி தீர்ப்பதற்காக ரஷ்ய அரசால் கைது செய்யப்பட்ட ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்பில் பயிற்சி பெற்ற தற்கொலை பட தீவிரவாதி மஷ்ரப் கான் அசமோ குறித்த விரிவான விவரங்களை கூற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் இந்த செய்தியை ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்டிருக்கிறது தீவிரவாதி மஸ்ட்ரப் கான் அசோமோ துருக்கியில் பயிற்சி பெற்றவர் எனும் அவர் இந்திய நாட்டின் விசாவை பெறுவதற்காக மாஸ்கோவிற்கு அனுப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாதி மஸ்ராப்கான் அசோமோவிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்தியா தரப்பில் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.