சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே வீரப்பன் பாளையத்தை சேர்ந்த வேல்சத்ரியன் தனியார் கட்டிடத்தில் சினிமா சூட்டிங் எடுப்பதாக கூறிவந்துள்ளார். அதே அலுவலகத்தில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் இந்திரா நகரை சேர்ந்த ஜெயஜோதி என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனிடையே சேலம் இரும்பாலையை சேர்ந்த கனகா என்ற கணவரை பிரிந்த பெண் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகளை வலைதளத்தில் தேடியுள்ளார். துணை நடிகை தேவை என்று விளம்பரத்தை பார்த்து சேலம் state bank காலனி என்ற முகவரிக்கு சென்று வாய்ப்பு கேட்டுள்ளார்.
அங்கிருந்த வேலு சத்திரியன் மற்றும் ஜெயஜோதி ஆகிய இருவரும் தங்கள் தயாரிக்கும் படத்தை துணைநடிகையாக நடிக்க வைக்க ரூபாய் 30,000 வேண்டும் என்று கேட்டனர். அதற்கு அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த அலுவலகத்தில் அவரை உதவியாளராக பணியில் சேர்த்துக்கொண்டனர். கடந்த மூன்று மாதங்களாக அந்த அலுவலகத்தில் கனகா வேலை செய்து வந்தார். அவருக்கு சம்பளமும் கொடுக்கவில்லை. கனகா சம்பளம் கேட்டபோது ஆபாச படத்தில் நடித்தால் பணம் தருவதாக கூறியுள்ளனர்.
இதனால் வேலையை விட்டுவிட்டு வெளியில் வந்த கனகா சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் சில பெண்களை வைத்து ஆபாச படம் எடுப்பதாகவும், அறை முழுவதும் ஆபாச படங்களை ஒட்டி வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் வேல் சத்ரியன் மற்றும் ஜெயஜோதி ஆகிய இரண்டு பேரையும் பிடித்து விசாரணை செய்த போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளியானது.
அவர்கள் இருவரும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி கடந்த எட்டு மாதங்களாக 300க்கும் மேற்பட்ட இளம் பெண்களை ஏமாற்றி ஆபாசமாக படம் எடுத்து சீரழித்தது தெரிய வந்தது. சினிமா ஆசை காட்டி அங்கு வந்த பெண்களுடன் உல்லாசமாக இருந்துள்ளனர். மேலும் அந்த அலுவலகத்தில் போலீசார் நடத்திய சோதனையில் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வந்த பெண்களின் ஆபாச காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க்கள், ஆணுறை பாக்கெட், லேப்டாப், கேமராக்கள், பென் டிரைவர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் தாயாரிடம் இயக்குனர் வேல் சத்திரியன் பேசுவது போன்று ஒரு ஆடியோ வெளியாகி உள்ளது. அந்த ஆடியோவை உங்க மகளை எனக்கு மிகவும் பிடித்துள்ளது. அவளை நல்ல இடத்துக்கு கொண்டு போகலாம். நீங்க தப்பா நினைக்காதீங்க. அவளை நானே ரெடி பண்ணவா என்று கேட்டார். அதற்கு இளம் பெண்ணின் தாயார் நீங்களே ரெடி பண்ணுங்க என்று கூறுகிறார். தொடர்ந்து எல்லாம் இருக்கும் அவளிடம் உள்ள பயம் கூச்சத்தை போக்க வேண்டும் என்று கூற இந்த உரையாடல் தொடர்கிறது.
ஒரு பெண்ணை ஆபாச வீடியோவில் நடிக்க வைத்த கற்பழிப்பு காட்சி நடிக்க வைக்க சம்மதிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். முதலில் இயக்குனர் உங்கள் டாடி என்ன சொன்னாரு நீ போனதுக்கு அப்புறம் உங்க அப்பா போன் பண்ணி என்னிடம் நொய் நொய் என்று கேட்டார். இளம் பெண் எனது அப்பா போயிட்டு பத்திரமா வா என்று தான் கூறினார். அதன் பிறகு இயக்குனர் நீ ரெடியாயிட்டியா? என்ன சீன் கொடுத்தாலும் நடிப்பியா? ரொமான்ஸ், லிப் டு லிப், ரேப் சீன் எல்லாமே செய்ய வேண்டும் என்று கூற ரேப் சீனில் நான் நடிக்க மாட்டேன் என்று அந்த இளம் பெண் கூறுகிறார். எல்லாத்துக்கும் சரி என்று சொல்லிவிட்டு இப்போ வேண்டாம் என்றால் நான் செஞ்சு காட்டட்டுமா என்று அந்த உரையாடல் முடிகிறது. இப்படி பல பெண்களை பேசி பேசி சீரழித்து வந்தது தெரிய வந்துள்ளது. இந்த ஆடியோ அனைத்தும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இப்படி பல பெண்களை அவர் சீரழித்துள்ளது தெரியவந்துள்ளது .