Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

நீ படிச்ச ஸ்கூல்ல…. நான் ஹெட்மாஸ்டர் டா…. சசிகலாவின் ட்விஸ்ட்… திகைத்து போன தமிழக போலீஸ் …!!

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனையை முடித்து, கொரோனா தொற்றில் இருந்து மீண்டு தனிமைப்படுத்தப்பட்ட சசிகலா இன்று தமிழகம் கிளம்பினார். அவருக்கு தமிழக எல்லையில் இருந்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிமுகவினரும் கொடியுடன் சசிகலாவை வரவேற்றது அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. ஏனென்றால் தமிழக எல்லைக்குள் நுழையும் சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்று மாறிமாறி அமைச்சர்கள் டிஜிபியிடம் மனு கொடுத்தனர்.

இந்த நிலையில் தமிழகம் எல்லை வந்த சசிகலா அதிமுக கொடி கட்டிய… அதிமுக கட்சி உறுப்பினர் பெயரில் பதிவு செய்யப்பட்ட…. அதிமுக ஒன்றிய செயலாளர் காரில் தமிழக எல்லைக்குள் பயணம் செய்தார்.  இது காவல்துறை திகைப்படைய வைத்தது.

Categories

Tech |