மின்சாரத் துறையில் ஊழல் நடைபெற்று வருவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக வைத்து வருகிறார். மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்து வந்தாலும் இதற்கு பதிலளிக்க முடியாது என்று சொன்னாலும் அண்ணாமலை குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டே வருகிறார். இதனால் அண்ணாமலைக்கும், செந்தில் பாலாஜிக்கும் இடையே வார்த்தைப்போர் மூண்டு வருகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, மின் விவகாரத்தில் தமிழக அரசு வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும். ஏற்கனவே அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் பல முறை லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி இருக்கின்றனர். ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அவர் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இது எப்படி இருக்கிறது என்றால் “அண்டாக் கரியைப் பார்த்து அடுப்புக்கரி நீதான் கருப்பு” என்று கூறியது போல் இருக்கிறது என்று பேசியுள்ளார்.