Categories
தேசிய செய்திகள்

“நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லை… எனக்கு நீதான் வேண்டும்”… கலங்க வைக்கும் காதல் கதை..!!

முகத்தில் ஆசிட் வீசி சிகிச்சைபெற்று வந்த ஒரு பெண்ணை இளைஞன் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஒருதலையாக காதலித்து அந்த பெண் தன் காதலை ஏற்க மறுத்தால் ஆசிட் வீசுவது என்பது  பழக்கமாகிவிட்டது. இதனால் பல பெண்களின் வாழ்க்கை வீணாகி உள்ளது. ஆனால் தற்போது அந்த நிலை சிறிது அளவில் குறைந்து வருகிறது. அப்படியாக ஒடிசாவில் வாழும் பிரமோதினி என்பவரை சிறுமியாக இருக்கும்போது ஒருவர் ஆசிட் வீசி சென்றுள்ளார். பின்னர் அவர் கண் பார்வையை இழந்து இருளிலே வாழ்ந்துவந்தார்.

28 வயதான பிரமோதினி சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த நண்பர் 29 வயதான சரோஜ் சாஹூ. பிரமோதினியை  கவனிப்பதற்காக தனது வேலையை விட்டுவிட்டு முழுநேரமும் அவரை கவனித்து வந்துள்ளார். இதையடுத்து அது சிறிது நாட்களில் காதலாக மாறியது. பின்னர் குடும்ப சம்பவத்துடன் இந்த மாதம் ஒன்றாம் தேதி இவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்தில் ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட ஆறு பேருடன் ஆயிரம் பேர் கலந்து கொண்டனர். பிரமோதினி தனக்கு கண் அறுவை சிகிச்சை செய்த போது முதலில் சரோஜ் சாஹூவை தான் பார்த்தேன் என்று தெரிவித்தார். நான் எப்படி இருக்கிறேனோ அதே போல் என்னை ஏற்றுக் கொண்டு என்னை நேசிக்கிறார். நான் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதுதான் அவருடைய ஆசை என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |